முதல் உள்நாட்டு விமானம் தாங்கி ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.!
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணித்தார். அடுத்தாண்டு இறுதிக்குள் அது முழுவதும் செயல்பட்டிற்கு வரும் என கடற்படை தெரிவித்துள்ளது. பிரிட்டனிடம் இருந்து இந்தியா வாங்கிய விக்ராந்த், விராட் ஆகிய போர் கப்பல்கள் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றனர். சோவியத் ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா மட்டுமே தற்போது சேவையில் உள்ளது.
1971-ல் பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றிய விக்ராந்த் கப்பலின் நினைவாக உள்நாட்டிலேயே தயாராகி உள்ள விமானம் தங்கி போர் கப்பலுக்கு ஐ.என்.எஸ்.விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது. கொச்சியில் நடக்கும் விழாவில் இந்த போர் கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்தார். இருப்பினும் அனைத்து ஒத்திகைகளும் முடிந்து விக்ரமாதித்யா உடன் இணைந்து அடுத்தாண்டு இறுதிலேயே விக்ராந்த் சேவையில் இறங்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை வடிவமைத்த ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல், கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்தில் 23,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய நவீன போர்க்கப்பல்களில் ஒன்றான ஐ.என்.எஸ்.விக்ராந்தின் கட்டுமான பணிகள் கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு பணிகள் முடிந்து முதல் பயணத்தை தொடங்கியது. 45 ஆயிரம் டன் எடை கொண்ட இக்கப்பலில் 14 தளங்களில் 2,300 பிரிவுகள் உள்ளன. மிக் ரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உட்பட ஒரே நேரத்தில் 30 விமானங்களை விக்ராந்தில் இருந்து இயக்க முடியும்.
பெண் அதிகாரிகளுக்கு தனிப்பிரிவை உள்ளடக்கிய கப்பலில் ஒரே நேரத்தில் 1,700 பேர் பணியாற்றலாம். 18 நாட் வேகத்தில் தொடர்ந்து 7,500 நாட்டிகல் மைல் தூரத்திற்கு பயணிக்க முடியும் இக்கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட். கப்பலில் உள்ள 4 கியாஸ் விசையாழிகள் மூலம் கப்பலுக்கு தேவையான 88 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளப்படும். சொந்தமாக விமான தாங்கி கப்பலை காட்டும் திறன் படைத்த அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது.
Leave your comments here...