இந்து அறநிலையத்துறையின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து – திமுக எம்.பி செந்தில்குமார் எதிர்ப்பு..!
- September 1, 2022
- jananesan
- : 561
இந்து அறநிலையத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது தொடர்பாக திமுக எம்.பி.செந்தில்குமார் விமர்சன ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தர்மபூரி திமுக எம்பியாக இருப்பவர் செந்தில்குமார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கக் கூடிய செந்தில்குமார், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ட்விட்களை பதிவிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செந்தில்குமார், அதில் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். அனைவருக்கும் பொதுவான அரசு நிகழ்வில் ஒரு மதத்தின் சடங்கை மட்டும் பயன்படுத்துவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக இந்து அறநிலையத்துறையின் ட்விட்டர் பகக்த்தில், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இந்து சமய அறநிலையத்துறை’ என வாழ்த்து செய்தி பகிரப்பட்டிருந்தது. இதனை விமர்சனம் செய்துள்ள செந்தில்குமார், இதற்காக மறைந்த முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கருணாநிதியின் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
"இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான்.
கடவுள் வழிபாடு செய்வதோ,
அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல" – கலைஞர்.சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம். https://t.co/mP88CLZ3IF
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) August 31, 2022
இது தொடர்பாக செந்தில்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ “இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல” – கலைஞர். சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம்’ என கூறியுள்ளார்.
Leave your comments here...