சோதனையில் ஓட்டத்தில் சாதனை..! மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்..!
இந்தியாவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நவீன அம்சங்களுடன் மற்றும் சிறப்பு வசதிகளுடன், அதிவேகத்தில் செல்ல கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், குளிரூட்டப்பட்ட சேர் கார் வசதிகளுடன் கூடிய ரயில் பெட்டிகள் உள்ளன. 180 டிகிரி அளவுக்கு சுழல கூடிய திறன் படைத்த சுழலும் நாற்காலியானது ரயிலில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ரயிலானது சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சென்று சாதனை பதிவு செய்துள்ளது.
Superior ride quality.
Look at the glass. Stable at 180 kmph speed.#VandeBharat-2 pic.twitter.com/uYdHhCrDpy— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 26, 2022
இதுபற்றி மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கோட்டா-நாக்டா பகுதிகளுக்கு இடையே வந்தே பாரத்-2 எக்ஸ்பிரஸ் ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. அது மணிக்கு 120, 130, 150 என கடந்து 180 கி.மீ. வேகத்தில் பயணித்து உள்ளது என தெரிவித்து உள்ளார். முதல்கட்ட ஆய்வின்போது, வந்தே பாரத் ரெயிலானது, நீரால் தூய்மை செய்யப்பட்டது.
आत्मनिर्भर भारत की रफ़्तार… #VandeBharat-2 at 180 kmph. pic.twitter.com/1tiHyEaAMj
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 26, 2022
இதுதவிர்த்து, ரயிலின் அனைத்து வகையான உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. பல்வேறு வேக மட்டத்தின் அடிப்படையில் கோட்டா மற்றும் நாக்டா ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்யப்பட்டது. ரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகளின் அசைவுகளும் பரிசோதனை செய்யப்பட்டன.
#VandeBharat-2 speed trial started between Kota-Nagda section at 120/130/150 & 180 Kmph. pic.twitter.com/sPXKJVu7SI
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 26, 2022
இதற்காக ஆர்.எஸ்.டி.ஓ. (ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரநிர்ணயம்) அமைப்பின் குழு ஒன்று பணியில் ஈடுபட்டது. இந்த பகுதிகளில் 6 கட்டங்களாக நடந்த அடுத்தடுத்த சோதனை ஓட்டத்தில் ரயிலானது பல இடங்களில் மணிக்கு 180 கி.மீ. வேகம் எட்டி சாதனை பதிவு செய்தது.
Leave your comments here...