சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்..!

இந்தியாதமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்..!

எத்தியோப்பியா நாட்டிலிருந்து பெரும் அளவு போதை பொருள் சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள்,ஆப்பிரிக்கா நாடான எத்தியொப்பியா நாட்டின் அடீஸ் அபாபா நகரிலிருந்து சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர்.

அதில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். ஆனால் அவர்களிடம் இருந்து எந்தவிதமான போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை.இந்த நிலையில் இந்தியரான இக்பால் பாஷா (வயது-38) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் எதற்காக ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியன் சென்று வருகிறார்? என்று கேட்டனா்.அதற்கு அந்த பயணியால், சரியான பதில் அளிக்க முடியவில்லை.

இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தனர்.அப்போது அவர் அணிந்திருந்த காலணிகள் மற்றும் உள்ளாடைகள், அவர் அணிந்திருந்த கோர்ட்டுக்குள் ரகசியப்பை அறைகள் என்று பல்வேறு இடங்களில் மொத்தம் 9 கிலோ 590 கிராம் எடையுடைய கொக்கைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய் 100 கோடி என தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பயணியை கைது செய்த சுங்கத்துறையினா்,ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருளையும் பறிமுதல் செய்து, அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இந்த ரூ.100 கோடி மதிப்புடைய போதை பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்து, எங்கெங்கெல்லாம் கடத்த இருந்தாா்.இவர் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடத்துகிறது

Leave your comments here...