மின் கட்டணம் உயர்விற்காகப் போராட்டம் நடத்தும் அதிமுக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை..?அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி..!
மின் கட்டணம் உயர்விற்காகப் போராட்டம் நடத்தும் அதிமுக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பியுள்ளார்.
கரூரில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், பேரணியைத் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீடுகளுக்கு பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டாருக்கு மாதம்தோறும் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், வீடுகள், குடிசைகளில் வசிக்கும் மின் நுகர்வோருக்கு எந்தவித ஸ்மார்ட் மீட்டர் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 35 லட்சம் மின் இணைப்புகளில் 1 கோடி இணைப்புகளுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை என தெரிவித்தார்.
101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் 63 லட்சத்து 35 ஆயிரம் பயனீட்டாளர்களுக்கு மாதம் 27 ரூபாயும், 2 மாதத்திற்கு 55 ரூபாய் மட்டுமே கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் சொல்வது ஏற்புடையது அல்ல என்றும் எந்த காரணத்தைக் கொண்டும் ஸ்மார்ட் மீட்டாருக்கு மாத கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 1.54 லட்சம் கோடி கடன் தொகையை உயர்த்தியது யார்? அந்த கடன் தொகைக்கு மாதம் 16 லட்சம் கோடி வட்டி கட்டியது யார்? என கேள்வி எழுப்பினார். விவசாயிகளுக்கு மின் இணைப்பு கேட்டு 4.15 லட்சம் பேர் விண்ணப்பித்துக் காத்திருந்த போது அவர்களுக்கு மின் இணைப்பு ஏன் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூடக் கூடிய நிலைக்கு முன்னாள் அதிமுக அரசு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
Leave your comments here...