துப்பாக்கி சூட்டில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு…! உலக தலைவர்கள் இரங்கல்

உலகம்

துப்பாக்கி சூட்டில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு…! உலக தலைவர்கள் இரங்கல்

துப்பாக்கி சூட்டில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு…! உலக தலைவர்கள் இரங்கல்

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார்.

அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபே இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். சாலை பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். அபேவின் முதுகுப்பக்கம் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

அதையடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்து மயங்க நிலையில் இருந்த ஷின்சோ அபேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், உயிரிழந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உலக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
பிரதமர் நரேந்திர மோடி


நமது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். சர்வதேச அளவில் அவர் சிறந்த அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாகி. ஜப்பானையும் உலகையும் சிறந்த இடமாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இந்தியா-ஜப்பான் உறவுகளை உலகளாவிய கூட்டணி நிலைக்கு உயர்த்துவதில் மகத்தான பங்களிப்பைச் செய்தார். முழு இந்தியாவும் ஜப்பானுடன் வருந்துகிறது மற்றும் இந்த கடினமான தருணத்தில் எங்கள் ஜப்பானிய சகோதர சகோதரிகளுடன் நாங்கள் ஆதரவாக நிற்கிறோம். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை( ஜூலை 9) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் .

ஜப்பான் பிரதமர் பியுமியா கிஷிடா
ஷின்சோ அபேவை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமான முயற்சியை டாக்டர்கள் மேற்கொண்டுள்ளனர். அவர் அபாய கட்டத்தில் உள்ளார். தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. இந்த வன்முறை சம்பவம் காட்டுமிராண்டிதனமான செயல். ஏற்று கொள்ள முடியாது.ஷின்சோ அபேவை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமான முயற்சியை டாக்டர்கள் மேற்கொண்டுள்ளனர். அவர் அபாய கட்டத்தில் உள்ளார். தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. இந்த வன்முறை சம்பவம் காட்டுமிராண்டிதனமான செயல். ஏற்று கொள்ள முடியாது.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ்
ஷின்சோ அபே சுடப்பட்டார் என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தி ஜப்பானில் இருந்து வந்துள்ளது. இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் ஜப்பான் மக்கள் நினைவாக எண்ணங்கள் உள்ளன

தைவான் அதிபர் சாய் இங் வென்
அனைவரையும் போல் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைகிறேன். ஜப்பானும், தைவானும் சட்டத்தின்படி ஆட்சி நடத்தும் ஜனநாயக நாடுகள். இந்த வன்முறை மற்றும் சட்டவிரோத செயலுக்கு, எனது அரசாங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கிறேன். ஷின்சோ அபபே எனக்கு மட்டுமல்ல, தைவானுக்கும் நெருங்கிய நண்பர். தைவானை பல ஆண்டுகள் ஆதரித்த அவர், இரு தரப்பு உறவுகளை முன்னெடுத்து சென்றார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல்
இந்தியா – ஜப்பானிய உறவை ஆழப்படுத்த முக்கிய பங்காற்றிய முன்னாள் ஷின்சோ அபே மீதான தாக்குதல் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவர் குணமடைய வேண்டி கொள்கிறேன். அவரது குடும்பத்தினர் ஆதரவாக எங்களது நினைவுகள் உள்ளன.

ஜப்பானுக்கான இந்திய தூதர் இமானுவேல்
ஜப்பானின் தலைசிறந்த தலைவராக இருந்த ஷின்சோ அபே, அமெரிக்காவுடன் அசைக்க முடியாத கூட்டாளியாக இருந்துள்ளார். அவருக்காகவும், குடும்பத்திற்காகவும், ஜப்பான் மக்களுக்காகவும் அமெரிக்க அரசும் மக்களும் பிரார்த்தனை செய்வார்கள்.

Leave your comments here...