இந்தியா
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் – இந்திய கடலோர காவல்படையில் இணைப்பு..!
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் இன்று இணைக்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் திரு விஎஸ் பதானியா தலைமை தாங்கினார். ராணுவம் மற்றும் குடிமைப்பணி அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர். தேடுதல் மற்றும் மீட்பு, கடலோர கண்காணிப்பு ஆகிய துறைகளில் சுயசார்பை அடைந்ததை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெல்காப்டரை தயாரித்துள்ளது. இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் படிப்படியாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 4 ஹெலிகாப்டர்கள் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
Leave your comments here...