லண்டனில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்குதல் : பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன் என தகவல்..?
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தினார். சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் இருவர் உயிரிழந்தனர். மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலையடுத்து, லண்டன் மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து லண்டன் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாகிஸ்தானில் பிறந்து பின் பிரிட்டன் குடியுரிமை பெற்றவன் உஸ்மான்கான் 28. பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி மேற்கொண்டவன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவன் 2012 ல் லண்டன் பங்குச்சந்தை அலுவலகத்தில் குண்டு வைக்க சதி செய்ததாக கைது செய்யப்பட்டான். தொடர்ந்து இந்த விசாரணையில் அவனுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் உஸ்மான்கான் இஸ்லாமிய கொள்கையில் நம்பிக்கை கொண்டவன் என்றும், ஜிகாத்தை பின்பற்றி வந்தவன் என்றும் அந்த தீர்ப்பில் கோடிட்டு காட்டப்பட்டடுள்ளது. கான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளான். அங்கு முழு அளவில் பயிற்சி எடுத்துள்ளான் என்ற தகவலும் உறுதியாகி உள்ளது. இவன் அல்குவைதாவுடன் தொடர்பில் இருந்தானா என்ற ஆதாரம் ஏதும் இல்லை.அந்த நபர் இடுப்பில் அணிந்திருந்த பட்டை, தற்கொலைத் தாக்குதலுக்கானது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதால் போலீசார் சம்பவ இடத்திலேயே அவனை சுட்டுக்கொன்றனர். ஆனால் அந்த நபரிடம் வெடிகுண்டு ஏதும் இல்லை என்றும், போலியான வெடிகுண்டு பட்டை அணிந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
Leave your comments here...