அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு – பீகாரில் இளைஞர்கள் ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு!
இந்திய ராணுவத்தில் குறுகிய காலம், நிரந்தரம் என இரண்டு வகைகளில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குறுகிய கால அடிப்படையில் 1ப் ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் ஓய்வு பெறும் வரையிலும் ரானுவத்தில் பணியாற்ற முடியும்.
இதனிடையே ராணுவத்தில் அதிகளவு வீரர்களை சேர்க்கும் வகையில் ‘அக்னிபாத்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதால் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன்மூலம் 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரலாம். இவர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ.4.76 லட்சம் சம்பளமும் கடைசி மற்றும் 4-ம் ஆண்டில் ஆண்டுக்கு ரூ.6.92 லட்சம் சம்பளமும் வழங்கப்படும். பணி நிறைவடையும்போது ஒவ்வொரு வீரர்களுக்கும் ரூ.11.7 லட்சம் சேவை நிதி வழங்கப்படும். முதற்கட்டமாக 45 ஆயிரம் வீரர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ள நிலையில் இவர்களுக்கு 6 மாதம் பயிற்சி வழங்கப்படும். இவர்களின் விருப்பம், பணித்திறனை பொறுத்து இதில் 25% வீரர்கள் ராணுவத்தில் நிரந்தரமாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மீதம் உள்ள 75% வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
#WATCH | Youth hold protest in Jehanabad over the recently announced #AgnipathRecruitmentScheme for Armed forces. Rail and road traffic disrupted by the protesting students. pic.twitter.com/iZFGUFkoOU
— ANI (@ANI) June 16, 2022
இந்த நிலையில் ராணுவ பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தில் பணியாற்றி ஆயுத பயிற்சி பெற்ற இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு பணியில் இருந்து வெளியேற்றப்பட்டால் அவர்களால் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனும் அச்சமும் எழுந்துள்ளது.
பீகாரில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சாப்ரா என்ற இடத்தில் ரயிலுக்கு தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரயில் நிலையங்களில் இருந்த இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களையும் தீ வைத்து எரித்ததால் பதற்றமான சூழல் உருவானது. பீகாரின் நவாடா என்ற இடத்தில் பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கி இளைஞர்கள் தீ வைத்தனர். இதேபோல ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்திலும் சமூக விரோத கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. இப்பகுதிகளில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
Leave your comments here...