நேரடி பெட்ரோல் விற்பனை நிலையம் : அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார்..!
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் கிராமத்தில் ,பெட்ரோல் நேரடி விற்பனை நிலையத்தை ,தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்துவைத்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தபோது: தமிழக பா.ஜ.க .தலைவர் அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து, நாங்கள் மன உறுதியுடன் உள்ளோம். எள் முனை அளவும் குற்றமில்லை. இந்த அரசு அனைத்து திட்டங்களையும் வெளிப்
படைத்தன்மையுடன் நிறைவேற்றி வருகிறது.
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் பதவி தருவது தொடர்பாக தலைவரும் கட்சித் தலைமையும் முடிவு செய்யும். பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து என்பது இந்தியாவில் மிகப்பெரிய திட்டமாகும். போக்குவரத்து துறையில், 46 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் விட்டுச் சென்றது. கடனில் இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துவது ,தொடர்பான கேள்விக்கு ஆளுநரை, கேட்க வேண்டிய கேள்வி என்று பதிலளித்தார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ கூட்டுறவுத்துறையில் ஐந்து பவுனுக்கு கீழே நகை கடன் தள்ளுபடி செய்ததை குற்றம் என்கிறாரா.? சென்றாண்டு 10 ஆயிரத்து 400 கோடி பயிர்க்கடன் அளித்தது தவறு என்கிறாரா.? மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அதிமுக அரசு அறிவித்த கடன் சுமைகளை திமுக அரசு ஏற்று திறம்பட செயல்படுத்தி வருகிறது.
கூட்டுறவுத்துறை மந்தமாக செயல்படாமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஐயப்பன், மருதுபாண்டி துரைப்பாண்டி இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தைச் சேர்ந்த மணிகண்டன் செல்வ பிரபு சிவகுமார்.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி : Madurai -Ravichandran
Leave your comments here...