நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

இந்தியா

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் மாணவ – மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு மே 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதனைத்தொடர்ந்து, மே, 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. நேற்றுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வரும் 20-ஆம் தேதி, இரவு 9 மணிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆயுதப்படை, நர்சிங் கல்லூரிகளில் B.Sc., நர்சிங் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கல்லூரிகளில் நர்சிங் படிப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க ஏதுவாக அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், வரும் 20-ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கூடுதலாக பலரும் விண்ணப்பிக்க வாய்ப்பாக அமையும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Leave your comments here...