அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை : வரும் 26ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.!

தமிழகம்

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை : வரும் 26ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.!

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை : வரும் 26ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.!

சென்னை- பிரதமர் நரேந்திர மோடி வரும் 26ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையிலான இரண்டடுக்கு மேம்பாலச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதோடு, பல்வேறு திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்

இதற்காக .ரூ.5,800 கோடி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே மேம்பாலச்சாலை அமைக்கும் பணிகள், 2010ம் ஆண்டு 1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கின. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். கடந்த 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், கூவத்தில் நீரோட்டம் பாதிக்கும் வகையில் பிரமாண்ட துாண்கள் அமைக்கப்பட்டாதாக கூறி, மேம்பால சாலை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால்,பணிகள் துவங்கவில்லை. தற்போது, இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5,800 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டடுக்கு மேம்பாலச்சாலை அமைய உள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா, வரும் 26ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில், பிரதமர் மோடிபங்கேற்க உள்ளார்.

இந்த விழாவில், சென்னை- – பெங்களூரு விரைவுச்சாலை திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மத்திய நகர்ப்புற வீட்டுவசதி துறை வாயிலாக கட்டப்பட்டுள்ள 1,000 அடுக்குமாடி குடியிருப்புகளையும், பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.

மாமல்லபுரம்- – புதுச்சேரி இடையிலான சாலையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், தமிழக அரசு சமீபத்தில் ஒப்படைத்தது. இந்த சாலையை ஆறு வழியாக விரிவாக்கம் செய்யும் பணிகளும் துவங்கப்பட உள்ளன.

ரயில் சேவை போடிநாயக்கனுார் – -மதுரை இடையிலான ரயில் சேவை திட்டங்களையும் பிரதமர் துவக்கி வைக்க உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைய உள்ள பன்முக சரக்கு போக்குவரத்து பூங்கா, மீன்சுருட்டி- – சிதம்பரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இதில், பிரதமருடன், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், முதல் முறையாக அரசு நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க உள்ளனர்.

அப்போது, தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம், முதல்வர் ஸ்டாலின் முன்வைப்பார் என தெரிகிறது.இதனிடையே, சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையிலான இரண்டடுக்கு மேம்பாலச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகம், கடற்படை ஆகியவை இடையே, நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலின், மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங், தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Leave your comments here...