ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் டவுன்வில்லே பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்து உள்ளார். அவருக்கு வயது 46. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய சைமண்ட்ஸ் டவுன்வில்லேவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து குயின்ஸ்லேண்ட் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, நேற்று இரவு 10:30 மணிக்கு அவரது காரில் தனியாக பயணம் செய்துள்ளார். அப்போது அவரது கார் ஹெர்வி ரேஞ்ச் பகுதிக்கு வந்தபோது, சாலையை விட்டு விலகி விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முயன்றும் அது பலனளிக்கவில்லை என தெரிவித்தனர்.
உயிரிழந்த கிரிக்கெட் வீரர் சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 5088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் 1,462 ரன்கள் எடுத்துள்ளார்.ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸ், பேட்டிங் செய்வதுடன் நடுத்தர வேகம் மற்றும் சுழற்பந்து என தேவைக்கேற்றபடி பந்து வீசவும் செய்வார். சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார்.
சமீபத்தில் உயிரிழந்த முன்னாள் வீரர் ஷேன் வார்னே இழப்பில் இருந்தே ஆஸ்திரேலிய அணி மீண்டு வராத சூழலில், மற்றும் ஒரு ஜாம்பவான் சைமண்ட்ஸ் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Leave your comments here...