சில்லறை பணவீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..!!
கடும் விலைவாசி காரணமாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
மத்திய புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் மாத சில்லறை பணவீக்கம் 7.79 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். சமையல் எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை உயர்வே சில்லறை பணவீக்கம் பெருமளவு உயர காரணமாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3.75 விழுக்காடாக இருந்த கிராமப்புற பணவீக்கம், இந்த ஆண்டு 8.38 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் 4.71 விழுக்காடாக இருந்த நகர்ப்புற பணவீக்கம் நடப்பாண்டு 7.09 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த ஏப்ரலில் 1.96 விழுக்காடாக இருந்த உணவுப்பொருள் பணவீக்கம் நடப்பாண்டு 8.38 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
ஜனவரி மாதம் முதலே பணவீக்கம் 6 விழுக்காட்டுக்கு மேல் தொடர்ந்து நீடித்து வருகிறது. உணவு பொருட்கள், காய்கறிகள் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தாமல், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Leave your comments here...