கார் மாடல்கள் விலையை 1.1 சதவீதம் உயர்த்தியது டாடா நிறுவனம்..!
பயணியர் வாகனங்களின் விலையை 1..1 சதவீதம் டாடார் மோட்டா்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை் உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வாகனத் தயாரிப்புக்கான மொத்த செலவு அதிகரித்துள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்தது.
இதனால் அந்நிறுவனம் கார், வேன், பேருந்து உள்ளிட்ட பயணியர் வாகனங்களின் விலையை சராசரியாக 1.1 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த விலைய உயர்வு (ஏப்ரல் 23) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.mவிலை உயர்வு கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப வேறுபடும்.
புதிய விலை விவரங்கள்:
டாடா டியாகோ மாடல் விலை ரூ. 5 லட்சத்து 22 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 67 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டாடா பன்ச் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 67 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 48 ஆயிரம் ஆகும்.
டாடா டிகோர் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 82 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 44 ஆயிரம் என மாறி இருக்கிறது.
டாடா டிகோர் EV மாடல் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 39 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டாடா அல்ட்ரோஸ் மாடல் விலை ரூ. 6 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10 லட்சம் என நிர்ணயம் மாறி இருக்கிறது.
டாடா நெக்சான் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 42 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 73 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டாடா நெக்சான் EV மாடல் விலை ரூ. 14 லட்சத்து 54 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 15 ஆயிரம் என மாறி இருக்கிறது.
டாடா ஹேரியர் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 52 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 81 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டாடா சஃபாரி மாடல் விலை ரூ. 15 லட்சத்து 02 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Leave your comments here...