சென்னை ஐஐடி உடன் இந்திய விமானப்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து..!
இந்திய விமானப்படையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்திய விமானப்படை மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவை ஏப்ரல் 13 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
இந்திய விமானப்படையின் தலைமை பராமரிப்பு தள தலைமை பொறியியல் அதிகாரி (சிஸ்டம்ஸ்) ஏர் கமோடோர் எஸ் பஹுஜா மற்றும் சென்னை ஐஐடி ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறைத் தலைவர் பேராசிரியர் எச் எஸ் என் மூர்த்தி ஆகியோர் தில்லி துக்ளகாபாத் விமானப்படை நிலையத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தற்சார்பு இந்தியா சுதேசமயமாக்கல் முயற்சிகளை விரைவுபடுத்துவதை சென்னை ஐஐடி உடனான இந்திய விமானப்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பல்வேறு ஆயுத அமைப்புகளுக்கான உள்நாட்டுத் தீர்வுகளைக் கண்டறிவதில் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளை விமானப்படை அடையாளம் கண்டுள்ளது. சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் முன்மாதிரி மேம்பாட்டிற்கான ஆராய்ச்சி குறித்த ஆலோசனைகளை சென்னை ஐஐடி வழங்கும்.
இந்திய விமானப்படையின் தலைமை பராமரிப்பு தளத்தின் கள செப்பனிடுதல் பணிமனைகளின் உள்நாட்டுமயமாக்கல் முயற்சிகளுக்கு சென்னை ஐஐடி உடனான இந்திய விமானப்படையின் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறிப்பிட்ட அளவு பங்காற்றும். இதன் மூலம் நீடித்த திறன் மற்றும் மேலாண்மை வளர்ந்து, தற்சார்புக்கு வழிவகுக்கும்.
Leave your comments here...