சித்திரை விஷு பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு..!
கேரளாவில் வருகிற 15ந் தேதி கொண்டாடப்படும் விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூைஜக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, தீபாராதனை காட்டினார்.
இன்று (திங்கட்கிழமை) முதல் 18ந் தேதி வரை கோவில் நடை காலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை, சகஸ்ர கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
15ந்தேதி விஷு பண்டிகையை முன்னிட்டு சன்னிதானத்தில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகிறது. இதையொட்டி சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடக்கிறது. முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசன அனுமதி அளிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
Leave your comments here...