18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு..!

இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு..!

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு..!

நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்டோர் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கோவிட்-19 பூஸ்டர் டோஸ்களை தனியார் மையங்கள், மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது கோவிட் பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பட்சத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம். இது ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நடைமுறையில் வரவுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாடு முழுவதும் இலவச கோவிட் தடுப்பூசி திட்டத்தின் மூலம், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கோவிட் தடுப்பூசி முதல் டோஸ், இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து செலுத்தப்படும்.

இவர்கள் தவிர, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல், தனியார் மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் பணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம்.

இவர்களுக்கு கோவிட் பூஸ் டர் தடுப்பூசி அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக செலுத்தப்படாது.நாட்டில் உள்ள 15வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 96 சத வீதம் பேர் முதல் டோஸ் கரோனா தடுப்பூசியும், 83 சதவீதம் பேர் 2வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது கோவிட் பரவல் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்திவருகின்றன. தமிழ்நாட்டில் கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் கவனத்துடன் செயல்பட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்துவதன் மூலம் உடலில் ஆன்டிபாடிகள்கள் அதிகரித்து தொற்றை எதிர்கொள்ளும் திறன் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...