வெளிநாட்டு நன்கொடை சட்டம்; திருத்தங்களை உறுதி செய்து உத்தரவு – உச்ச நீதிமன்றம்..!
- April 9, 2022
- jananesan
- : 739
- donation
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெற்று நம் நாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில், கடந்த 2020ல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திருத்தங்கள் மிக கடுமையாகவும், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் கூறி சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
மனுவை விசாரித்த நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு:வெளிநாட்டு நன்கொடைகள் நாட்டின் சமூக பொருளாதார கட்டமைப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிநாட்டு நன்கொடைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது மற்றும் தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட கடந்தகால அனுபவங்களின் காரணமாக, கடுமையான சட்டங்கள் அவசியமாகிறது. எனவே, இந்த திருத்தங்களை நீதிமன்றம் உறுதி செய்கிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Leave your comments here...