2022-ன் இரண்டாம் காலாண்டில் இஓஎஸ்-02 செயற்கைக்கோள் செலுத்தப்படும் – ஜிதேந்திர சிங் தகவல்..!
2022-ன் இரண்டாம் காலாண்டில் இஓஎஸ்-02 செயற்கைக்கோள் செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
2022-ன் இரண்டாம் காலாண்டில் இஓஎஸ்-02 செயற்கைக்கோள் செலுத்தப்படும். இஓஎஸ்-02 என்பது விவசாயம், வனவியல், புவியியல், நீரியல், மின்சக்தி மின்னணுவியல், எதிர்வினை சக்கரங்கள் போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுக்கான செயற்கைக்கோள் ஆகும்.2021-ன் 4-ம் காலாண்டில் செலுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டபோதிலும், பெருந்தொற்று பரவல், அதன் விளைவான ஊரடங்கால் உலகளாவிய மற்றும் உள்நாட்டு விநியோகச் சங்கிலியில் சீர்குலைவு, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்டவை தாமதத்திற்கு காரணிகளாக இருந்தன.
இஓஎஸ்-03 செயற்கைக்கோள் தோல்விக்கான காரணங்கள் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், கிரையோஜெனிக் மேல்நிலையில் ஏற்பட்ட ஒரு ஒழுங்கின்மை தோல்விக்கு வழிவகுத்தது என்பதை ஆரம்ப கட்ட விசாரணைகள் குறிக்கின்றன என்றார்.
ஒழுங்கின்மைக்கான காரணங்களைக் கண்டறிய கல்வித்துறை மற்றும் இஸ்ரோவைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட தேசிய அளவிலான தோல்விப் பகுப்பாய்வுக் குழு (எஃப்ஏசி) உடனடியாக அமைக்கப்பட்டது. எதிர்கால ஜி.எஸ்.எல்.வி பயணங்களுக்கு கிரையோஜெனிக் மேல் நிலையின் வலிமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பகுப்பாய்வுக் குழு பரிந்துரைத்து.
இதைத் தொடர்ந்து, தேவையான மாற்றங்களுடன் கூடிய ஜிஎஸ்எல்வி வாகனம் 2022-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave your comments here...