சக்திவாய்ந்த 100 இந்தியர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்..!
- April 2, 2022
- jananesan
- : 593
சக்திவாய்ந்த 100 இந்தியர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தியாவின் சக்திவாய்ந்த 100 இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அமித் ஷா உள்ளார். மூன்றாவது இடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளார். நான்காவது இடத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும், ஐந்தாவது இடத்தில் முகேஷ் அம்பானியும் உள்ளனர். சென்ற ஆண்டு பட்டியலில் 13-வது இடத்தில் இருந்த யோகி ஆதித்யநாத் இம்முறை 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
7வது இடத்தில் இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி உள்ளார். 8வது இடத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளார். 9வது இடத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். 10வது இடத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளார்.
5 மாநில தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வென்றது, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்டது,கொரோனா தடுப்பூசியை பரவலாக கொண்டு சேர்த்தது போன்ற நடவடிக்கைகள் மோடியின் செல்வாக்கை மேலும் உயர்த்தியுள்ளது என்று அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 23-வது இடத்தில் இருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மிகப்பெரும் அளவில் தொடர் வெற்றிகளை ஈட்டியதன் மூலம் அவர் இந்த இடத்தை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கு 11-வது இடம், 12வது இடத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, 13-வது இடம் ராஜ் நாத் சிங், 14-வது இடம் பி.எல்.சந்தோஷ் பாஜக தேசிய பொதுச் செயலாளர், 15 வது இடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் .
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே 16-வது இடம், பினராயி விஜயன் 24-வது இடம், சோனியாகாந்தி 27-வது இடம், ஜெகன் மோகன் ரெட்டி 39-வது இடம், ராகுல்காந்தி 51-வது இடம், பிரியங்கா காந்தி 78-வது இடம், 94-வது இடத்தில் நடிகை கங்கனா ரனாவத் இடம்பெற்றுள்ளார் என்று அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
Leave your comments here...