மிரட்டல் எதிரொலி : தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரிக்கு ஒய்-பிரிவு பாதுகாப்பு..!
விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி மற்றும் அனுபர் கெர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’.
90-களின் முற்பகுதியில் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவான திரைப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் நாடு முழுவதும் பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்திற்காக அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் வரிச்சலுகை வழங்கியுள்ளது. பிரதமர் மோடி உள்பட பல்வேறு பாஜக தலைவர்களும் இந்த திரைப்படத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர்.தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைக்கு வந்த 8 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த படத்திற்கு ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபக்கம் சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் வந்துக் கொண்டிருக்கின்றன. இதனால், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு மத்திய பாதுகாப்பு படையின் கீழ் ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
Leave your comments here...