விரட்டியடித்தது உக்ரைன்: காப்பாற்றிய இந்தியா – பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பெண்..!

இந்தியாஉலகம்

விரட்டியடித்தது உக்ரைன்: காப்பாற்றிய இந்தியா – பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பெண்..!

விரட்டியடித்தது உக்ரைன்: காப்பாற்றிய இந்தியா – பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பெண்..!

உக்ரைனில் இருந்து தன்னை பாதுகாப்பாக மீட்டதற்காக அந்நாட்டிற்கான இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்

ரஷ்யா தாக்குதல் காரணமாக உக்ரைனில் தவித்து வந்த இந்திய மாணவர்களை ‘ஆபரேசன் கங்கா’ திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. இதற்காக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது. உக்ரைன் அண்டை நாடுகளுக்கு மாணவர்களுக்கு அழைத்து வரப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக அங்கும், டில்லியிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்திய மாணவர்களுடன் பல வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் உக்ரைனில் இருந்து மீட்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்மா ஷஃபிக் என்ற பெண் இந்திய தூதரகத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “என் பெயர் அஸ்மா ஷஃபிக். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். நெருக்கடியான நேரத்தில் இங்கு சிக்கியுள்ள எங்களுக்கு எல்லா வகையிலும் உதவிவரும் இந்திய தூதரகத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய பிரதமருக்கும் நன்றி. இந்திய தூதரகம் மூலமாக நாங்கள் பாதுகாப்பாக வீடு செல்கிறோம் என நம்புகிறேன்” எனப் பேசியுள்ளார்.

Leave your comments here...