பல்முனை பயிற்சியான ‘மிலான் 2022’ கடற்படை கூட்டுப் பயிற்சி நிறைவு..!
இந்திய கடற்படை சார்பில், ‘மிலான் 2022’ எனப்படும் கடற்படை கூட்டுப்பயிற்சி, விசாகப்பட்டினத்தில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. ‘தோழமை, ஒற்றுமை, ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ‘மிலான் 2022’ கூட்டுப்பயிற்சி நேற்று நிறைவு பெற்றது.
26 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் மற்றும் 21 விமானங்கள் கலந்துகொண்ட மிலன் கடற்படை பயிற்சியின் 11-வது பதிப்பு 2022 மார்ச் 4 அன்று நிறைவுற்றது. கடற்படை செயல்பாடுகளின் செயல்திறன், இணைந்து செயல்படுதல், பரஸ்பர புரிதல் மற்றும் நட்பு, கடற்படைகள் உடனான ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பல்வேறு கடினமான மற்றும் மேம்பட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அமெரிக்க மற்றும் இந்திய போர் விமானங்கள் கலந்துகொண்ட விமான எதிர்ப்பு போர் பயிற்சிகள் முதல் இரண்டு நாட்களில் கடலில் மேற்கொள்ளப்பட்டன. ஹெலிகாப்டர், கப்பல் மற்றும் பீரங்கி பயிற்சிகளும் நடைபெற்றன.கிழக்கு கடற்படைப் பிரிவின் தளபதி சந்தீப் பல்லா நிறைவு நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார்.பயிற்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக, மிலன் 22-ல் கலந்து கொண்ட நாடுகளின் தலைமை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Leave your comments here...