இந்தியா
விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி 52 ராக்கெட்.!
பூமியை ஆய்வு செய்வதற்கான செயற்கைகோள் இ.ஓ.எஸ்., 04 இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு கழகம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) இன்று திங்கள் காலை 5;59 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் பவன் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி., சி 52 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்., 04 என்ற செயற்கை கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.
பூமிபைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இ.எஸ்.ஓ., 04 செயற்கை கோள் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் 1710 கிலோகிராம் எடை கொண்டது. பூமியிலிருந்து 579 கி.மீ உயரத்தில் நிறுவப்பட உள்ளது. இது பூமியின் தட்பவெப்பநிலை, விவசாயம், வனவளம் குறித்த தெளிவான புகைப்படங்களை எடுக்கக் கூடியது.
Leave your comments here...