பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்..!
மதுரை மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி, அறிவுறுத்தலின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இது குறித்தான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது
அந்த வகையில், மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம் தும்பைப் பட்டியில் உள்ள கக்கன் நினைவு மண்டபத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமானது, மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்தும், பெண் கல்வி பேணுதல், சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும், பெண்களுக்கு சமூகத்தில் உள்ள பொறுப்பு குறித்தும், சமூக கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு குறித்தும், பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், எந்தெந்த வகையில் தடுக்கலாம் என்பது குறித்தும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம் குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் எந்த வகையில் அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பது குறித்தும், பெண் குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் அதில் பெற்றோர்களின் பொறுப்பு குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம் குறித்தும், பெண் குழந்தைகளுடைய கவனம் எந்தெந்த வகையில் திசை திருப்பப்படுகிறது என்பது குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத பெற்றோர்கள் தங்கள் பெண் சிசுக்களை தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கலாம் என்பது குறித்தும், பாலியல் குற்றங்கள் நிகழும்போது அதனை தடுப்பது குறித்தும் ,மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் எடுத்துரைத்தார்கள்.
மேலும் ,இந்த விழிப்புணர்வு கூட்டத்தில்சந்திரமௌலி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, மாவட்ட காவல் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மேலூர் அருகே தும்பைப்பட்டியில் நடைபெற்றது மேலூர் டிஎஸ்பி பிரபாகரன், ஆய்வாளர்கள் சார்லஸ், ரமாராணி,பொன்னருள், ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான், ஒன்ஸ்டாப் சென்டர் நிர்வாகி பிரேமலதா,குழந்தைகள் நல அலுவலர் பாண்டியராஜன்,சண்முகம்,உட்பட பலர் பங்கேற்றனர். , காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Leave your comments here...