மலையேற சென்றபோது பாறை இடுக்கில் சிக்கிய வாலிபர் – மீட்பு பணிக்கு வரும் ராணுவம்..!

இந்தியா

மலையேற சென்றபோது பாறை இடுக்கில் சிக்கிய வாலிபர் – மீட்பு பணிக்கு வரும் ராணுவம்..!

மலையேற சென்றபோது பாறை இடுக்கில் சிக்கிய வாலிபர் – மீட்பு பணிக்கு வரும் ராணுவம்..!

மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட கேரளாவை சேர்ந்த 23 வயதான பாபு என்ற இளைஞர், கடந்த 41 மணி நேரத்துக்கும் மேலாக கேரளாவின் குரும்பாச்சி மலையிடுக்கு ஒன்றில் சிக்கித்தவிக்கிறார். சமூக வலைதளங்கள் வழியாக அதிக கவனம் பெற்று வரும் இந்த இளைஞரை பத்திரமாக மீட்க, தமிழகத்தில் இருந்தும் பெங்களூர் இருந்தும் மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளன.

கேரளாவின் மலம்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரான பாபு என்பவர், ட்ரெக்கிங் எனப்படும் மலையேறுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்துவந்தவர். கடந்த திங்கள்கிழமையன்று பாபுவும், அவரது மூன்று நண்பர்களும் கேரளாவின் குரும்பாச்சி மலைக்கு சென்றுள்ளனர். மலையேற்றத்தின்போது நடுவழியில் கால் இடறியதில் பாபு, உருண்டு விழுந்துள்ளார். கீழே தவறி விழுந்த அவர், மலை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கிக் கொண்டார். இதில் அவரது கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாபு உருண்டு கீழே விழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், மலையின் மேல் பகுதிக்கு சென்று கயிறு மூலம் அவரை மீட்க முயன்றிருக்கின்றனர். ஆனால், அவர் விழுந்த பகுதி சரியாக தென்படாததால் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அப்போது தான் பார்வைக்கு புலப்படாத இடுக்கில் அவர் சிக்கிக் கொண்டது அவர்களுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்திருக்கின்றனர்.

நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்புப் படையினர், அவரை மீட்க பல முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றனர். ஆனால் எந்த முயற்சியும் அவர்களுக்கு பலன் அளிக்கவில்லை. மலையிடுக்கு பகுதி என்பதால் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் முயற்சியின் மீட்புக்குழு ஈடுபட்டிருக்கிறது. ஆனால் இதுவும் தோல்வி அடைந்தது. இடுகான பகுதி என்பதால், பாபுவுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை அளிப்பதே மிகவும் சிரமமாகியுள்ளது. இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறார் அந்த இளைஞர்.

பாபுவை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் சூழலில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ராணுவத்தின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து பெங்களூருவில் இருந்து ஒரு பிரிவினரும், தமிழகத்தின் வெலிங்டனில் இருந்து ஒரு பிரிவினரும் குரும்பாச்சி மலைக்கு புறப்பட்டுள்ளனர்.

Leave your comments here...