பாஜக சார்பில் போட்டியிடும் 22 வயது இளைஞர் – ட்விட்டரில் வாழ்த்திய அண்ணாமலை..!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு வரைமுறை செய்யப்பட்டப்படி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருச்சி மாநகராட்சியில் 12-வது வார்டில் போட்டியிட நவநீதகிருஷ்ணன் என்ற இளைஞர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
22 வயதான அன்பு சகோதரர் நவநீதகிருஷ்ணன் @NaveenkrishY திருச்சி கார்ப்பரேஷன் 12 ஆவது வார்டுக்கு @BJP4TamilNadu வேட்பாளராக களமிறங்குகிறார்! #ModijiCricketClub மூலமாக அந்த பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். சமுதாயப் பணியில் நாட்டம் கொண்டவர்! நம் மக்களுக்கு பணி செய்ய வாழ்த்துக்கள்!
— K.Annamalai (@annamalai_k) February 1, 2022
அதில், “22 வயதான அன்பு சகோதரர் நவநீதகிருஷ்ணன் திருச்சி கார்ப்பரேஷன் 12-வது வார்டுக்கு பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக களமிறங்குகிறார். #மோடிஜிகிரிக்கெட்கிளப் மூலமாக அந்தப் பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். சமுதாய பணியில் நாட்டம் கொண்டவர். நம் மக்களுக்கு பணி செய்ய வாழ்த்துக்கள்!” என வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார். 22 வயதான நவநீதகிருஷ்ணன், கடந்த 2018-ம் ஆண்டு முதல் பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினராக உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...