உ.பி.யில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் விருப்பம் – தலைமை தேர்தல் ஆணையர்
உத்தரப்பிரதேசத்தில் திட்டமிட்டபடி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
உத்தப்பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் முடிவடையும் நிலையில் அதற்குள் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. ஆனால் ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக தேர்தல் தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா உத்தரப்பிரதேச கட்சிகளின் பிரதிநிதிகளுடன் லக்னோவில் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின் பேசிய சுஷில் சந்திரா, அனைத்து கட்சிகளும் திட்டமிட்டபடி தேர்தல் நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறினார். கொரோனா தொற்றை தடுக்க உரிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என அவர்கள் கூறியதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். பேரவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் வைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
Leave your comments here...