77 நாடுகளுக்கு பரவியது ஒமைக்ரான் – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு
உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் 77 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்டா கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இப்போதுதான் பல நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன. இதையொட்டி ஆங்காங்கே சில நாடுகளில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நேரத்தில் திடீரென ஒமிக்ரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் 77க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் இது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனாம், முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைவிட, ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்றார். தற்போது77 நாடுகளில் ஒமைக்ரான் பரவியிருந்தாலும், உரிய சோதனை நடத்தாதால், பல நாடுகளில் அவை இருப்பது தெரியாமல் இருக்கலாம் என்றார்.
ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி போடுவதை உலக சுகாதார அமைப்பு எதிர்க்கவில்லை என்றும், அதேநேரத்தில், இதை காரணமாக கொண்டு தடுப்பூசி பதுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
Leave your comments here...