திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகள் விவரம் வெளியீடு..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் பலர் தங்களின் சொத்துகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இவை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து பாதுகாப்புத்துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் பலர் தங்களின் சொத்துகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அந்த சொத்துகள் பல்வேறு ஊர்களில் உள்ளன. இவை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து பாதுகாப்புத்துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தேவஸ்தானத்துக்கு உள்ள 1,128 சொத்துக்களில் 8 ஆயிரத்து 88 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 141 இடங்களில் உள்ள சொத்துகளில் 335.23 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 61 இடங்களில் உள்ள 293.02 ஏக்கர் விவசாய நிலமும், 80 இடங்களில் விவசாய நிலமல்லாத 42.21 ஏக்கர் நிலங்களும் ரூ.6 கோடியே 13 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி 987 இடங்களில் உள்ள 7753.6 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 172 இடங்களில் உள்ள நிலம் வேளாண் சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போது 1792.39 ஏக்கர் விவசாய நிலமும், 5,961 விவசாயமல்லாத நிலமும் திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...