காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவு..!
டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. மாசடைந்த காற்றை சுவாசிப்பதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் காற்று மாசடைவதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த காற்று மாசுபட்டால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் காற்று மாசுபாடு என்பது மிக முக்கிய பிரச்சனை காற்றுத்தர குறியீட்டை 500 இல் இருந்து 200 ஆக குறைக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் பொதுமக்கள் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். விவசாய கழிவுகளை எரிக்க இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது டெல்லியில் கடுமையாக காற்று மாசடைந்துள்ளது.
இதனால் மாணவர்களின் நலன் கருதி நாளை முதல் (03.11.2021) மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் நிலையில் எதற்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஓரிரு மாதங்களாக தான் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வந்தது. தற்போது மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...