கணக்கில் வராத ரூ.2.27 கோடி பறிமுதல் : பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா கைது – லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!
வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளராக பணியாற்றியவர் ஷோபனா.
வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தங்கியுள்ள இவரது வீடு மற்றும் அவரது காரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அக்டோபர் 3 ஆம் தேதி சோதனை நடத்தியதில், உரிய ஆவணங்கள் இல்லாத 21 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஓசூரில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று, ஓசூரில் ஷோபனாவிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை மீண்டும் வேலூர் அழைத்து வந்த நிலையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷோபனா வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் செய்து, 15 நாள் நீதிமன்றக் காவலில் வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைத்தனர்.
Leave your comments here...