அரசியல்
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..!
மாநிலங்களவையில் இன்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை கூடியதில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சியை சேர்ந்த 12 எம்.பிக்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து இடை நீக்கம் செய்து மாநிலங்களவை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சஸ்பெண்ட் செயப்பட்ட எம்.பிக்களின் விவரம்: இளமாறம் கரீம் (சிபிஎம்), பூலொ தேவி நேதம், ஷ்யா வெம்ரா, ஆர். போரா, ராஜமனி படேல், சையது நசிர் ஹூசைன், அகிலேஷ் பிரசாத் சிங், ( காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ). பினோய் விஸ்வம் (சிபிஐ) தோலா சென் &ஷாந்தா சேத்ரி (திரிணாமூல் காங்கிரஸ்), பிரியங்கா சதுர்வேதி &அனில் தேசாய், (சிவசேனா).
Leave your comments here...