டிசம்பர் மாதத்தில் சர்வதேச விமான போக்குவரத்திற்கு சேவையை துவக்க மத்திய அரசு அனுமதி..!
கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கி மீண்டும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச விமான போக்குவரத்திற்கு சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
இதனையடுத்து, இந்த சேவை டிசம்பர் 15 முதல் மீண்டும் தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சேவையை மீண்டும் தொடர்வதற்கு உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை சார்பில் 14 நாடுகளில் இரு வழி விமான போக்குவரத்து சேவைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
— DGCA (@DGCAIndia) November 26, 2021
இந்த 14 நாடுகள் கொண்ட பட்டியலில் பிரிட்டன், சிங்கப்பூர், சீனா, தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளும் உள்ளடக்கம். மற்ற நாடுகளில் விமான போக்குவரத்தில் எந்த சிக்கல்களும் இல்லையென அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய வகை B.1.1.529 வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன், சிங்கப்பூர், இஸ்ரேல், ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் 6 ஆப்பிரிக்க நாடுகளுடன் விமான சேவையை தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...