கேரள மாடல் அழகிகள் திட்டமிட்டு கொலையா.? விபத்தா.? சிசிடிவி பதிவு காட்சிகள் அழிப்பு – ஓட்டல் அதிபர் உள்பட 6 பேர் கைது..!
கேரள மாநிலம், கொச்சியில் கடந்த 2019ம் ஆண்டு, ‘மிஸ் கேரள அழகி’ போட்டி நடந்தது. இதில் முதல் இடத்தை அன்சி கபீரும் (26), 2வது இடத்ைத அஞ்சனா சாஜனும் (24) கைப்பற்றினர். 2 பேரும் கடந்த 1ம் ேததி கொச்சியில் உள்ள ஓட்டலில் நடந்த இரவு ேகளிக்கை விருந்தில் பங்கேற்றனர். அதன் பிறகு காரில் ஊருக்கு திரும்பினர். கொச்சி புறவழிசாலையில் வந்தபோது, இவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில் அன்சி கபீர், அஞ்சனா சாஜன், முகமது ஆசிக் ஆகியோர் இறந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது விபத்துக்குள்ளான காரை ஒரு சொகுசு கார் பின்தொடர்ந்தது சென்றது தெரியவந்தது. அந்த கார் யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அதில், அந்த கார் மாடல் அழகிகள் இரவு விருந்தில் பங்கேற்ற ஓட்டல் உரிமையாளர் ராய் ஜோசப்பிற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 2 நாட்களுக்கு முன் ராய் ஜோசப்பிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே அழகிகள் பங்கேற்ற இரவு விருந்தில் யார்? யார்? கலந்து கொண்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி ேகமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் முக்கியமான காட்சிகள் அழிக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த காட்சிகள் அடங்கிய கேசட்டை ஓட்டல் ஊழியர்கள் அங்குள்ள வாய்க்காலில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடந்த விசாரணையில், ராய் ஜோசப்தான் கேசட்டை வாய்க்காலில் வீச சொன்னதாக ெதரிவித்தனர்.
இதையடுத்து, ராய் ஜோசப் உள்பட ஊழியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மாடல் அழகிகளை பின் தொடர காரணம் என்ன? இரவு கேளிக்கை விருந்தில் போதை பொருள் பரிமாறப்பட்டதா? மேலும் நடந்தது விபத்தா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கைது நடவடிக்கை கூட மக்களின் தொடர் போராட்டத்தால் போலீசார் மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வளர்ந்து வந்த இரண்டு மாடல் அழகிகளின் உயிரை பறித்துள்ளது கேரளாவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Leave your comments here...