சமூகவலைதளத்தில் வகுப்புவாத வன்முறை குறித்து செய்தி – 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது

இந்தியா

சமூகவலைதளத்தில் வகுப்புவாத வன்முறை குறித்து செய்தி – 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது

சமூகவலைதளத்தில் வகுப்புவாத வன்முறை குறித்து செய்தி  – 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது

வங்காளதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்து மத மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து திரிபுராவின் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், ஹெச்.டபுள்யு என்ற ஆங்கில செய்தி நிறுவனத்தை சேர்ந்த சம்ருதி சுகன்யா மற்றும் ஸ்வர்னா ஜா ஆகிய 2 பெண் பத்திரிக்கையாளர் திரிபுரா வன்முறை தொடர்பான செய்தி சேகரிக்க அம்மாநிலம் சென்றனர்.

மேலும், கடந்த 11-ம் தேதி சுகன்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த மாதம் 19-ம் தேதி துர்கா பஜாரில் உள்ள மசூதியை சிலர் தீவைத்து கொளுத்தியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், படிஹோரி பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்ற இருவரும் திரிபுரா அரசு, மற்ற மதத்தை பின்பற்றும் மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியுள்ளனர். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் இருவரும் அசாம் சென்றுள்ளனர்.

இந்த வெறுப்புணர்வு கருத்துக்கள் தொடர்பாக சம்ருதி சுகன்யா மற்றும் ஸ்வர்னா ஜா மீது திரிபுராவின் கோமதி மாவட்டம் ககர்பன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை தொடர்ந்து அசாம் மாநில போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அசாமின் கரிம்கஞ்ச் பகுதியில் தங்கி இருந்த சம்ருதி சுகன்யா மற்றும் ஸ்வர்னா ஜா ஆகிய இரு பெண் பத்திரிக்கையாளர்களையும் அம்மாநில போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர். அதன் பின்னர் அசாம் விரைந்த திரிபுரா போலீசார் தடுப்பு காவில் இருந்த இரு பெண் பத்திரிக்கையாளர்களையும் இன்று கைது செய்து திரிபுரா அழைத்து வந்தனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண் பத்திரிக்கையாளர்களும் திரிபுராவின் உதைப்பூர் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதேவேளை இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இரு பெண் பத்திரிக்கையாளர்களும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உதைப்பூர் கோர்ட் சம்ருதி சுகன்யா மற்றும் ஸ்வர்னா ஜா ஆகிய இரு பெண் பத்திரிக்கையாளர்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Leave your comments here...