பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கும் 75 வயது பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி..!
நாகர்கோவில் சட்டசபைத் தொகுதி பாஜக எம்எல்ஏவான காந்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். அதற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் நான்கு பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் ஆனார்கள். அதில் ஒருவர்தான் நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி.கடந்த 1980-ம் ஆண்டு முதல் காந்தி தேர்தலில் போட்டியிட்டு வந்தது கவனிக்கத்தக்கது.கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இதுவரை 2 பேர் மட்டுமே பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கின்றனர். ஒருவர் சி. வேலாயுதம், இவர் 1996 தேர்தலில் வெற்றிபெற்றார். மற்றொருவர் எம்.ஆர்.காந்தி, தற்போது வெற்றி பெற்றிருக்கிறார்.
1980, 1984, 1989, 2006, 2011, 2016, என 6 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார் இவர். இதில் மூன்று முறை நாகர்கோவில் தொகுதியிலும், இரண்டு முறை குளச்சல் தொகுதியிலும், ஒரு முறை கன்னியாகுமரி தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு கிடைத்ததோ தொடர் தோல்விகள் மட்டும் தான். இந்நிலையில் தான் இப்போது 7-வது முறை போட்டியிட்டு நாகர்கோவில் எம்.எல்.ஏ,வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரொம்பவும் எளிமையானவர். உள்ளூர் மக்களின் அன்பைப் பெற்றவர். மக்களுக்காக அவர் எப்போதும் மக்களுடனேயே இருப்பவர். அவரது இந்த குணங்களை பாஜக சரியாக பயன்படுத்திக் கொண்டது. அவரது சொந்த செல்வாக்கும் கூடச் சேரவே எளிதில் வெற்றியும் பெற்றார்.
இந்த நிலையில் காந்தி 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டிருந்த டிவீட்டில்:- நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள மரண சாலைகள்,தெருக்களை உடனடியாக செப்பனிட , மாநகராட்சி பகுதிகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கிட, பாதாளசாக்கடை பணிகளை உடனடியாக நிறைவு செய்திட, புத்தன் அணை கூட்டுகுடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் என்று அறிவித்திருந்தார்.
1.நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள மரண சாலைகள்,தெருக்களை உடனடியாக செப்பனிட
2.மாநகராட்சி பகுதிகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கிட
3.பாதாளசாக்கடை பணிகளை உடனடியாக நிறைவு செய்திட
4.புத்தன் அணை கூட்டுகுடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட
வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம். pic.twitter.com/wnVvHOelwh
— M R Gandhi (@MRGandhiNGL) November 9, 2021
அதன்படி இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை வேப்பமூடு ஜங்ஷன் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உண்ணாவிரத போராட்டத்தை வடசேரி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் முன் தொடங்கினார்.
உண்ணாவிரத போராட்டத்தை வடசேரி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் முன் துவக்கினேன்.உடன் பாஜக சட்டமன்ற குழுத்தலைவர் திரு.@NainarBJP அவர்கள்,மாவட்ட தலைவர் திரு.தர்மராஜ் அவர்கள். pic.twitter.com/MrhGiQ9Wb5
— M R Gandhi (@MRGandhiNGL) November 11, 2021
இந்தப் போராட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழுகின்ற காந்தியாக இருக்கும் நாகர்கோவில் தொகுதியின் மக்கள் நாயகன், சட்டமன்ற உறுப்பினர் திரு.@MRGandhiNGL அண்ணாச்சி அவர்களுடைய 48 மணி நேரம் உண்ணாவிரதம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!
அரசு அதிகாரிகளும், மாவட்டத்தின் அமைச்சரும் இவருடைய கோரிக்கையை ஏற்று மக்களுக்கு பணி செய்ய வேண்டும்! https://t.co/vGTfNXhtuv
— K.Annamalai (@annamalai_k) November 11, 2021
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், வாழுகின்ற காந்தியாக இருக்கும் நாகர்கோவில் தொகுதியின் மக்கள் நாயகன், சட்டமன்ற உறுப்பினர் திரு. @MRGandhiNGL அண்ணாச்சி அவர்களுடைய 48 மணி நேரம் உண்ணாவிரதம் வெற்றியடைய வாழ்த்துக்கள்! அரசு அதிகாரிகளும், மாவட்டத்தின் அமைச்சரும் இவருடைய கோரிக்கையை ஏற்று மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Leave your comments here...