எல்லையில் ராணுவ வீரர்கள் உள்ளதாலேயே 130 கோடி மக்களும் நிம்மதியாக உள்ளனர் – ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளியை எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளியை காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் நவ்ஷாரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.
தீபாவளி கொண்டாட்டத்தின் போது ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு தீபாவளியின் போதும் நமது எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களுடன் நான் கொண்டாடி வருகிறேன். இன்று நமது வீரர்களுக்காக கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆசியை என்னுடன் கொண்டு வந்துள்ளேன்.
With our brave troops in Nowshera. https://t.co/V69Za4uZ3T
— Narendra Modi (@narendramodi) November 4, 2021
நமது வீரர்கள் பாரத மாதாவின் அணிகலன் ஆவர். உங்களால் தான் நமது நாட்டு மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். பண்டிகை காலங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது இப்படைப்பிரிவு ஆற்றிய பங்கை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமையடைகின்றனர்.
இதற்கு முன்னதாக, பாதுகாப்பு படையினருக்கான ஆயுதங்களை உற்பத்தி செய்ய பல ஆண்டுகள் தேவைப்பட்டது. பாதுகாப்புத்துறையில் சுயசார்புடன் இருப்பதே பழைய முறைகளில் இருந்து மாறுவதற்கான ஒரே வழியாகும்’ என்றார்.
Leave your comments here...