கோயில் நகைகளை உருக்குவதை எதிர்த்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..!

தமிழகம்

கோயில் நகைகளை உருக்குவதை எதிர்த்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..!

கோயில் நகைகளை உருக்குவதை எதிர்த்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..!

தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்து இருந்தது.

இது சம்பந்தமாக இந்து முன்னணி, பாஜகவினர், கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றும் தமிழக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்து முன்னணி சார்பில் தமிழக அரசையும் அறநிலைதுறை அமைச்சரையும் கண்டித்து மாபெரும் பிரச்சார நடைபெற்றது.

இதில் இன்று சேலம் மாநகரில் உள்ள கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் முன்பு பக்தர்களுக்கு தமிழக அரசு அறநிலை துறை அமைச்சர் கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக போட்ட நகைகளை உருக்குவது குறித்து மக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்து மாரியம்மனை தரிசித்து சென்றனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் ஊர்வலமாக உடம்பில் பிளக்ஸ் பேனர் மாட்டிக்கொண்டு கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது பல வருடங்களாக கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நகைகளை ஏதும் செய்யாமல் அப்படியே இருந்து வந்தது ஆனால் தற்போது அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் ஏதோ ஒரு எண்ணத்தை மனதில் வைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருகுகிறார் என அறிக்கை விடுகிறார் இதை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் பேசினார்

Leave your comments here...