ஐபிஎல் 2021 : மாஸ் காட்டிய “தல” தோனி – 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை

இந்தியாவிளையாட்டு

ஐபிஎல் 2021 : மாஸ் காட்டிய “தல” தோனி – 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை

ஐபிஎல் 2021 : மாஸ் காட்டிய “தல” தோனி – 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை

எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. நேற்று, துபாயில் நடந்த பைனலுக்கான முதல் தகுதிச் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த டில்லி, சென்னை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

டில்லி அணிக்கு ஷிகர் தவான் (7), ஸ்ரேயாஸ் ஐயர் (1) ஏமாற்றினர். அக்சர் படேல் (10) நிலைக்கவில்லை. தீபக் சகார் வீசிய 2வது ஓவரில் 4 பவுண்டரி விளாசிய பிரித்வி ஷா, ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். இவர், 60 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ரிஷாப் பன்ட் உடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த ஹெட்மயர் (37) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய பன்ட் அரைசதம் கடந்தார்.
டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்தது. பன்ட் (51) அவுட்டாகாமல் இருந்தார்.

சென்னை சார்பில் ஹேசல்வுட் 2 விக்கெட் வீழ்த்தினார்.சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுபிளசி (1) ஏமாற்றினார். அவேஷ் கான் வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசிய ராபின் உத்தப்பா, 35 பந்தில் அரைசதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ருதுராஜ் கெய்க்வாட், அக்சர் படேல் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்த போது உத்தப்பா (63) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ருதுராஜ், தன்பங்கிற்கு அரைசதமடித்தார்.

ஷர்துல் தாகூர் (0), அம்பதி ராயுடு (1) நிலைக்கவில்லை. அவேஷ் கான் பந்தில் ருதுராஜ் (70) அவுட்டானார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டன. டாம் கர்ரான் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் மொயீன் (16) அவுட்டானார். அடுத்து இரு பந்தில் பவுண்டரி அடித்த கேப்டன் தோனி, 4வது பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி சென்னை ரசிகர்களின் மனதை ‘ஜில்லுனு’ குளிர வைத்தார். சென்னை அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (18) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி சார்பில் டாம் கர்ரான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

டில்லி அணியை வீழ்த்திய சென்னை அணி, ஐ.பி.எல்., அரங்கில் 9வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. முன்னதாக விளையாடிய 8 பைனலில் 3ல் (2010, 2011, 2018) வெற்றி பெற்ற சென்னை அணி, 5ல் (2008, 2012, 2013, 2015, 2019) தோல்வியை தழுவியது.

சென்னையிடம் தோல்வியடைந்த டில்லி அணி பைனலுக்கு முன்னேற இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடக்கும் ‘எலிமினேட்டர்’ போட்டியில் (பெங்களூரு-கோல்கட்டா) வெற்றி பெறும் அணியுடன் வரும் அக். 13ல் சார்ஜாவில் நடக்கவுள்ள தகுதிச் சுற்று-2ல் மோத வேண்டும். இதில் வென்றால் பைனலுக்குள் (அக். 15) நுழையலாம்.

Leave your comments here...