ஆப்கானிஸ்தானில் மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு..! ஐ.எஸ்-கே பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

இந்தியா

ஆப்கானிஸ்தானில் மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு..! ஐ.எஸ்-கே பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு..! ஐ.எஸ்-கே பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள், ஆட்சியை கைப்பற்றினர். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து அங்கு அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூலில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், குண்டுஸ் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் நேற்று தொழுகையின் போது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 143 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் ஷியா பிரிவை பின்பற்றும் ஹஸாரா எனப்படும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் நடைபெற்றுள்ள மிகப் பெரிய வன்முறை இது.

இந்த குண்டுவெடிப்புக்கு, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கான் பிரிவான ஐ.எஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள அந்த அமைப்பு, சீனாவின் வலியுறுத்தலால், உய்கா் முஸ்லிம்களை ஒடுக்க முனையும் தலிபான்கள் மற்றும் ஷியா பிரிவினருக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளதாக அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் குண்டுவெடிப்புக்கு ஐ.நா சபை, கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சகி கூறும்போது, ‘எந்த ஒரு இழப்பும் மிகப்பெரும் துயரம். குண்டுவெடிப்பில் அன்புக்கு உரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave your comments here...