ஆப்கானிஸ்தானில் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு – 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!
ஆப்கானிஸ்தான் நாட்டில், மசூதி ஒன்றில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில், 100 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை, தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். அங்கு தலிபான்கள் தற்காலிக அரசை அமைத்துள்ளனர். எனினும் அந்த அரசு இதுவரை பதவி ஏற்கவில்லை. தலிபான் ஆட்சி அமைந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், குண்டுஸ் மாகாணத்தில் வெள்ளிக்கிழமையான இன்று மதியம், மசூதி ஒன்றில், தொழுகை நடைபெற்றது. அப்போது மசூதியை குறிவைத்து பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
இதில், 100 பேர் பலியாகினர். 90க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தை தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் உறுதிப்படுத்தி உள்ளார்.
மேலும், அவர் கூறுயதாவது: தற்போது சமூக ஊடகங்கள், பிற இடங்களில் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் மக்கள் அழிக்கப்பட்ட மசூதியைத் தேடுவதையும், வழிபாட்டாளரின் உடலை கொடூரமான காட்சியில் இருந்து ஆம்புலன்சிற்கு நகர்த்துவதையும் காட்டுகின்றன. குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். தலிபான் சிறப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. இதுவரை எந்தக் குழுவும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை.
Leave your comments here...