ஃபோர்ப்ஸ் நாளிதழின் டாப் 10 கோடீஸ்வரர்கள் : இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!
ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள 2021ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி 14-வது ஆண்டாக இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார்
2021ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 50 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
பங்குச் சந்தை வளர்ச்சி, டிஜிட்டல் சேவைகளுக்கான டிமாண்ட் உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 775 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
#Watch The top 10 richest Indians are now worth over $300 billion. Meet the members of the elite club #ForbesIndiaRichList2021
Full list here: https://t.co/zEBG88KEWn pic.twitter.com/3mEdhjeCMo
— Forbes India (@forbes_india) October 7, 2021
இந்திய பணக்காரர்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலராகும். தொடர்ந்து 14ஆவது ஆண்டாக இப்போதும் இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்.
இந்திய பணக்காரர்களில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 74.8 பில்லியன் டாலராகும். கடந்த 12 மாதங்களில் அதானியின் சொத்து மதிப்பு ஏறக்குறைய மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
மூன்றாம் இடத்தை எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 31 பில்லியன் டாலர். நான்காம் இடத்தில் ராதாகிஷன் தமானி உள்ளார். ஐந்தாம் இடத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் நிறுவனர் சைரஸ் பூனாவாலா இருக்கிறார்.
Leave your comments here...