இந்தியா-ஜப்பான் கடற்படை இடையே இருதரப்பு கடல்சார் பயிற்சி ‘ஜிமெக்ஸ்’ நாளை தொடக்கம்..!
இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்பு படை இடையே, 5-வது இருதரப்பு பயிற்சி, அரபிக் கடலில் நாளை முதல் 8ம் தேதி வரை நடக்கிறது.
இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் கொச்சி மற்றும் தேக் ஆகிய கப்பல்கள், கடற்படையின் மேற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் அஜய் கோச்சார் தலைமையில் பங்கேற்கின்றன. ஜப்பான் கடல்சார் சுய பாதுகாப்புப்படை சார்பில், ககா மற்றும் முராசேம் ஆகிய கப்பல்கள் பங்கேற்கின்றன.
கடற்படையின் பி8ஐ, டார்னியர் வகை ரோந்து விமானங்கள், மிக் 29கே ரக போர் விமானம் ஆகியவை இந்த பயிற்சியி்ல் பங்கேற்கின்றன.ஆயுதப்பயிற்சி, கப்பலில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் பயிற்சி, நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான போர் முறைகள் ஆகியவற்றில் இருநாட்டு கடற்படைகளும் ஈடுபடும்.
ஜிமெக்ஸ்-21 பயிற்சி, இருநாட்டு கடற்படைகள் இடையே ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கும்.
Leave your comments here...