காரைக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து குழந்தைகள் மரணம்..? மருத்துவர்களின் அலட்சியமே இதற்குக் காரணம்..! பொதுமக்கள் புகார்..?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு தலைமை மருத்துவமனையில் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. இதனால் காரைக்குடி மட்டுமின்றி தேவகேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் சிகிட்சை பெற்று வருகின்றனர் இங்கு ஏராளமான கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் சிகிட்சை பெற வரும் நோயாளிகளை அலைக்களிப்பதும், கேவலமாக பேசுவதும் , உதாசின படுத்துவதும் , தொடர்கதையாக நடந்து வருகிறது. இரவு நேர பணியில் மருத்துவர்கள் வருவது கிடையாது. செவிலியர்கள் குறிப்பாக பிரசவ நேரங்களில் செவிலியர்களின் அலட்சிய போக்காலும் மருத்துவர் வராத காரணத்தாலும், அலட்சியத்தால் தொடருந்து குழந்தைகள் இறக்கின்றனர்.
குழந்தைகள் இறப்புக்கு காரணமாக இருக்கும் இந்த மருத்துவமனையில் சரியான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லை. தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து போகும் மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பதால் ஏழை குடும்பத்தினர்களும், பொதுமக்களும் அச்சம் அடைகின்றனர் . சுகாதாரத்துறை அமைச்சர் தலையிட்டு குழந்தைகள் சாவுக்கான மருத்துவர்கள் , மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
மேலும் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் இது போன்ற அரசு மருத்துவமனைகளில் நடக்கும் தவறுகளை களைய வேண்டும். பிரசவ நேரத்தில் அவதிப்படும் அப்பாவி தாய்மார்களின் குழந்தைகளின் இறப்பு காரைக்குடி அரசு மருத்துவ மனையில் தொடர்கதையாகி வருகிறது.
ஏற்கனவே கொரோனா காலத்தில் சிகிச்சை மையத்தில் அதிகாலையில் இருந்து அடுத்தடுத்து 9 பேர் மூச்சுதிணறலால் உயிரிழந்தனர். சிசிச்சையில் இருந்தவர்களுக்கு ஆக்சிஜன் சீராக கிடைக்காதலாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
ஆகவே இது குறித்து மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சரும், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளரும், மாவட்ட ஆட்சியரும் மேற்கண்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டு காலமாக பிறந்த குழந்தைகள் கணக்கும், நோயாளிகளுக்கு சரியாக சிகிட்சை அழிக்காமல் அலைக்களிக்கும் மெத்தன செயலையும் அரசு கண்டறிந்து நேயாளிகளை உதாசின படுத்தும் , மருத்துவர்கள் மீதும், செவிலியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்குடி அரசு மருத்துமனை நிற்வாகம் மீது பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
செய்தி : V.Vasu
Leave your comments here...