பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையால் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டது: தமிழக அரசு வாதம்..!

சமூக நலன்

பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையால் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டது: தமிழக அரசு வாதம்..!

பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையால் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டது: தமிழக அரசு வாதம்..!

 


தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். அவரை மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் பணி நீட்டிப்பு வழங்கியது.இந்த பணி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த ஐகோர்ட்டு உத்தரவு செல்லும் என்றும், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் ஓராண்டு காலத்துக்கு சென்னை ஐகோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டது செல்லும் என்றும் கடந்த ஏப்ரல் 12ந்தேதி தீர்ப்பு கூறியது.

சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கலாம் என்றும், அந்த வழக்குகள் தொடர்பாக யாரையும் கைது செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும், கடத்தல் வழக்கு தொடர்பான அறிக்கைகளை இத்துறையின் உயர் அதிகாரியான ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங்கிடம் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்யவேண்டும் என்றும், அந்த அறிக்கையின் மீது அதிகாரி அபய்குமார் சிங் முடிவெடுப்பார் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு ஏப்ரல் 12ந்தேதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்ட சில முக்கியமான உத்தரவுகளை செயல்படுத்தவில்லை என்பதால் தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ள மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிலை கடத்தல் விசாரணை குறித்து பொன்.மாணிக்கவேல் தெரிவிப்பதில்லை. எந்த கூட்டங்களிலும் பங்கேற்பதில்லை. எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. வரும் 30ம் தேதியுடன் பொன்மாணிக்கவேலின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அந்த வழக்கு வரும் 18ம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் வாதிட்டார்.

Pictures:-ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையான் கோயிலுக்குச் சொந்தமான ஐம்பொன் நடராஜர் சிலை

மேலும்,பொன்.மாணிக்கவேல் கூறிக் கொள்ளும் சிலைகள், அவரது முயற்சியால் மீட்கப்படவில்லை என்றும், யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி விடுத்த கோரிக்கை அடிப்படையிலேயே, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் திரும்பப் பெறப்பட்டதாகவும், பொன்மானிக்கவேல் விட்டதாக தவறான செய்திகளை பரப்புவதாகவும் தெரிவித்தார்.இதனையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave your comments here...