கொலை செய்யப்பட்ட கோவை காவலர் செல்வராஜ் மகளுக்கு அரசு வேலை : தமிழக அரசுக்கு மக்கள் பாராட்டு…!!
கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி பணியில்ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய செல்வராஜ் அபராதம் விதித்தார். இதையடுத்து அவருக்கும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த 3 வாலிபர்களும் பெரும் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்தனர். காவலர் செல்வராஜை நடுரோட்டிலேயே வைத்து வெட்டிக் கொன்றனர்.
இதையடுத்து ஏற்பட்ட வன்முறை கலவரமாக மாறியது. பஸ்கள் எரிக்கப்பட்டன, கடைகளும் வீடுகளும் சூறையாடப்பட்டன. இந்தவன் முறையை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். காவலர் செல்வராஜ் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தக் கொலையில் தொடர்புடைய அல்-உம்மாவின் தலைவர் பாட்சாவின் மகன் சித்திக் அலி, அல்-உம்மா பொதுத் செயலாளர் முகம்மத் அன்சாரி உள்பட 9பேரைக் கைது செய்தனர். இதில் ஷாகுல் ஹமீத் என்பவர் சிறையிலேயே இறந்துவிட்டனர்.
இந்நிலையில் கோவை செல்வராஜ் இறந்த போது அவருக்கு பிறந்த சில மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்தது. அந்த பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது செல்வராஜ் மகள் லாவண்யாவுக்கு 21 வயது முடிந்து விட்டதால் அவருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ராஜமணி கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணியை வழங்கினார். பின்னர் லாவண்யா தனது தாயாருடன் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணை சந்தித்து வாழ்த்து பெற்றார். இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பாராட்டுகளை கூறி கொள்கிறேன் என தனது முகநூலில் பதிவு செய்து உள்ளார்.
Leave your comments here...