பருத்தி செடிக்கு டிரோன் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் செயல் விளக்கம்..!

தமிழகம்

பருத்தி செடிக்கு டிரோன் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் செயல் விளக்கம்..!

பருத்தி செடிக்கு டிரோன் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் செயல் விளக்கம்..!

காரியாபட்டி அருகே -துலுக்கங்குளத்தில் ஆளில்லாத விமானம் (டிரோன்) மூலமாக பயிர்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளிக்கும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

பொதுவாக, விளைநிலங்களில் கை தெளிப்பான் மற்றும் மோட்டார் பொருத்திய தெளிப்பான் மூலம்தான் விவசாயிகள் விளைநிலங்களில் பயிர்களுக்கு மருந்து தெளிப்பது வழக்கம்.

தற்போது, நவீனமான புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்கி வருகின்றனர். தற்போது ஆளில்லாத குட்டி பறக்கும் விமானம் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டம் காவல்துறை பாதுகாப்புக்காக ஆளில்லாத குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, துலுக்கங்குளம் கிராமத்தில் முன்னோடி விவசாயி கிருஷ்ணக்குமார் தோட்டத்தில் பருத்தி செடிக்கு அளில்லாத விமானம் மூலம் மருந்து தெளிக்கும் செயல்விளக்க முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குனர்
செல்வராணி, உதவி வேளாண்மை அலுவலர்கள் தெய்வம், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave your comments here...