குமரி மாவட்ட கோவில்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் அதிரடியாக கைது… ரூ.8.60 லட்சம் பொருட்கள் பறிமுதல்!
- September 7, 2021
- jananesan
- : 474
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கோயில்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றாவாளிகளை விரைவாக பிடிக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் ஆய்வாளர் தங்கராஜ்,உதவி ஆய்வாளர்கள் ஜாண்போஸ்கோ சரவணகுமார், சுந்தர்மூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 04.09.2021 அன்று குருந்தன்கோடு ஆசாரிவிளை சந்திப்பில் வைத்து சரல் பகுதியை சேர்ந்த அனிஷ்ராஜ் (33) S/O அல்போன்ஸ் என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர்.
அவரை விசாரணை செய்ததில் அவர் மீது இரணியல் காவல் நிலையத்தில் 10 வழக்குகளும், மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் 4 வழக்குகளும், வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், சுசீந்திரம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் 1 வழக்குகளிலும் ஆக 20 வழக்குகளில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
பின்னர் அவரிடமிருந்து 600 கிலோ வெண்கல பொருள்களும் சுமார் 60,000/- ரூபாய் 16 கிராம் தங்க நகைகளும் ஆக மொத்தம் 8,60,000/- ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றாவாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து கொள்ளை போன பொருட்களை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
Leave your comments here...